2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  நான்மணிக்கடிகை ஆசிரியர் யார்?

நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பி நாகனார்.

2.  நான்மணிக்கடிகை - பெயர்க் காரணம் தருக.

நான்கு + மணி + கடிகை எனப் பிரிந்து, நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட அணிகலன் எனப் பெயராகும்.

3.  விளம்பி நாகனார் பற்றிக் குறிப்பு வரைக.

‘விளம்பி’ என்பது இவரது ஊர்ப்பெயர் எனவும் ‘நாகனார்’ என்பது இவரது இயற்பெயராகவும் கொள்ள வேண்டும்.

4.  விளம்பி நாகனாரின் காலம் யாது?

விளம்பி நாகனாரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

5.  நான்மணிக்கடிகை எந்தத் தொகை நூலுள் அடங்கும்?

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அடங்கும்.

6.  கள்ளி, கடல் இவற்றுள் பிறப்பன யாவை?

கள்ளி வயிற்றில் அகிலும், கடலில் முத்துக்களும் பிறக்கும்.

7.  வெற்றி பெற வேண்டுமானால் செய்ய வேண்டியது யாது?

வெற்றி பெற வேண்டுமானால் சினத்தை விட்டுவிட வேண்டும்.

8.  இந்த உலகத்தில் நிலைபெற்றிருக்கச் செய்ய வேண்டுவது யாது?

இந்த உலகத்தில் நிலைபெற்றிருக்க வேண்டுமானால் புகழை நிலைபெறச் செய்ய வேண்டும்.

9.  நண்பரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

பெருஞ்செல்வத்தைப் பெறுவதாயினும் நண்பரிடம் ஒப்படைத்த செயலை ஆராயாமல் இருக்க வேண்டும்

10.  துன்பம் உடையது எது?

வறுமையைப்போல துன்பம் உடையது வேறு இல்லை.