திருக்குறள்
பயிற்சி - 4
Exercise 4
1. இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது எது?
இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது புகழேயாகும்.
2. வாழும் உயிர்களுக்கு ஊதியமாவது யாது?
வறியவர்களுக்கு ஒரு பொருள் ஈந்து அதனால் புகழ் உண்டாக வாழ்வது.
3. உலக மக்களுக்குப் பழியாவது யாது?
உலக மக்களுக்குப் பழியாவது தமக்குப் பின் நிற்பதாகிய புகழைப் பெறத் தவறுவது ஆகும்.
4. நிலம் வளமான விளைவு இல்லாமல் குன்றி விடுவது ஏன்?
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவரின் உடம்பைச் சுமக்கும் நிலமாவதால் நிலம் விளைவு இல்லாமல் குன்றி விடும்.
5. வாழ்வார், வாழாதார் யாவர் எனக் குறள் கூறுகிறது?
வாழ்வில் பழி உண்டாகாமல் வாழ்பவர் வாழ்வார், புகழ் இல்லாமல் வாழ்பவர் வாழாதவர் என்று குறள் கூறுகிறது.
6. நடுவுநிலைமை உடையவனின் செல்வ வளம் பற்றிக் குறள் கூறுவது என்ன?
நடுவு நிலைமை உடையவனின் செல்வ வளம் அழியாது, அவன் மரபினருக்கும் பயன் கொடுக்கும்.
7. அன்றே ஒழியவிட வேண்டியது எது?
நடுவு நிலைமை தவறி உண்டாகும் செல்வத்தை அன்றே ஒழிய விட வேண்டும்.
8. சான்றோர்க்கு அணியாவது யாது?
நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதே சான்றோர்க்கு அணியாகும்.
9. தக்கார், தகவிலர் என்பது எதனால் காணப்படும்?
அவரவர் வாழ்வில் எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும் தக்கார், தகவிலர் என்பது காணப்படும்.
10. வாணிகம் செய்வார்க்குச் சிறந்த வாணிகம் யாது?
வாணிகம் செய்வார்க்குச் சிறந்த வாணிகம் பிறர் பொருளையும் தம் பொருள்போல் போற்றிச் செய்தல்.