நான்மணிக்கடிகை
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நான்மணிக்கடிகை என்பது -------- நூல்களுள் ஒன்று.
நான்மணிக்கடிகை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. நான்மணிக்கடிகை நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட ------ எனப் பொருளாகும்.
நான்மணிக்கடிகை நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட அணிகலன். எனப் பொருளாகும்.
3. நான்மணிக்கடிகை -------- ஆனது.
நான்மணிக்கடிகை வெண்பாக்களால் ஆனது.
4. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் -----------.
திருக்குறள் நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார்.
5. விளம்பி நாகனாரின் ஊர்ப்பெயர் ------------ என்பதாகும்.
விளம்பி நாகனாரின் ஊர்ப்பெயர் விளம்பி என்பதாகும்.
6. விளம்பி நாகனாரின் இயற்பெயர் ------------ என்பதாகும்.
விளம்பி நாகனாரின் இயற்பெயர் நாகனார் என்பதாகும்
7. விளம்பி நாகனார் ------------ நூற்றாண்டினர்.
விளம்பி நாகனார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டினர்.
8. மன்னுதல் என்பதற்கு ------- என்பது பொருளாகும்.
மன்னுதல் என்பதற்கு நிலைபெறுதல் என்பது பொருளாகும்.
9. கள்ளியின் வயிற்றில் --------- பிறக்கும்.
கள்ளியின் வயிற்றில் அகில் பிறக்கும்
10. ஒருவனுக்கு வலிமை தருவது -------- ஆகும்.
ஒருவனுக்கு வலிமை தருவது செல்வம் ஆகும்