2. அற இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். காரி என்பது இயற்பெயராகவும், ஆசான் என்பது தொழிலால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம்.

இவர் சமண நெறியைச் சார்ந்தவர் என நூலின் காப்புச் செய்யுளால் அறியலாம். இவர் மாக்காயனார்தம் மாணவர் என்பதையும் நூலின் பாயிரச் செய்யுளால் அறிய முடிகிறது.