2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

பாட அறிமுகம்
Introduction to Lesson


நான்மணிக்கடிகை என்பது நான்கு + மணி + கடிகை எனப் பிரிந்து, நான்கு வகையான நீதிமணிகளால் கோக்கப்பட்ட அணிகலன் எனப் பொருளாகும். அணிகலன் உடலுக்கு அழகு தருவது போல இந்நூலின் ஒவ்வொரு பாடலின் நான்கு அறக் கருத்துகளும் மனிதரின் வாழ்க்கைக்கு அழகு (பயன்) சேர்க்கும்.