தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி


    வராஹ ஷேத்திரம்

    வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள்
    இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ
    நாராயணன்     மடியில்     பூமிப்பிராட்டியுடன்     காட்சிகொடுத்த
    திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.

    தீர்த்த ஷேத்திரம்

    சங்கன் முக்தி பெற்றதாலும், பெரும் ஞானிகளும் தபசிகளும் இந்த
    பொருநல்லாற்றில் அவதரித்ததாலும் முக்தியளிக்கும் ஸ்தலங்கள்
    இவ்வாற்றின் கரை மருங்கு அமைந்திருப்பதாலும் இதற்கு தீர்த்த
    ஷேத்திரம் என்று பெயர்.

    இவ்விதம் ஆதியில் தோன்றியதால் “ஆதிஷேத்திரம்” என்றும்,
    வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும்
    ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக
    அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும்,
    சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய     ஊராகையால் “தீர்த்த
    சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம்
    நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த குருகூரை “பஞ்சமஹா
    ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:24:48(இந்திய நேரம்)