பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
651

அருஞ்சொற்பொருள் அகராதி

       

பாட்டு எண்

  மறையோன் - அந்தணன் 5
  மன் - மன்னன் 111
  மன்னி - நிலைபெற்று 37
  மன்னும் - பொருந்திய 23
          பெரும்பான்மையும் 131
மனை - இடம், மிகுதி, குடி 96
 

மா

     
  மா - மான் 200
  மாசுணம் - பாம்பு 120
  மாட்டி - மாள்வித்து, தள்ளி 284
  மாத்தலை - கருந்தலை,நாய்த்தலை 338
மாத்து - பெருமை, தலைமகற்கு உரியளாய் நிற்றலான்  உண்டாகிய வரிசை 373
  மாதிரம் - திசை 352
  மாது - மடமை 316
  மாந்தி - பருகி 356
  மாம்போழ் - மாவடுவகிர் 79
  மால் - திருமால் 110
          பெரிய 306
மால்பு - கண்ணேணி 133
  மாழை - பேதைமை 61
மாற்றேன் - மாற்றப்படேன் 150
மானம் - கொண்டாட்டம்,  அளவை-பிரமாணம் 335
 

 மி

     
  மிலைத்து - சூடி 25
  மின் - ஒளி 74
 

மீ

     
  மீளி - மீளுதல் 151
 

மு

     
  முகை - போது 314
  முதுக்குறை - அறிவு முதிர்வு 232
முதுவோர் - முதுபெண்டிர் 348
  முந்தி - விரைந்து 99
  முரம்பம் - முரம்பு 237
  முரம்பு - கல் விரவி உயர்ந்திருக்கும் நிலம் 202
  முருகியம் - வெளியாட்டிற்குரிய இசைக்கருவி 299
  முருகு - நறுநாற்றம் முழவு-குடமுழா 157
  முழுவி - முத்தங்கொண்டு 227
  முழை - பாழி 65
முற்றாது - முடிவுபெறாது 59
        - முதிராது 307
  முறி - தளிர் 163
முன்னி - எதிர்ப்பட்டு 72
       முன்னும் பரந்து செல்லும் 236
  முனகர் - நீசர் 217
  முனை - பாசறை 316
 

மூ

     
  மூர்க்கர் - ஆராயாது ஏதம் செய்யும் தன்மையர் 98
மூவர் - சந்திராதித்தர் செந்தீக்கடவுள் 14
      நான்முகனும் மாலும் இந்திரனும் 337
மூவல் - ஒரு திருப்பதி 191
 

மெ

     
  மெய்த்தகை - மெய்யாகியகற்பு-புனையா அழகு 231
  மெல்லங்கழி - மெல்லிய கழி மெலியல்-நீமெலிய வேண்டா 234