இறை வாழ்த்து
பாட அறிமுகம்
Introduction to Lesson

இறைவனை வாழ்த்திச் செயல்களைத் தொடங்குவது மக்கள் வழக்கம். வாழ்த்து என்றால் போற்றுதல் என்று பொருள்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை உலகிற்கு அளித்தவர்கள் தமிழர்கள். இறைவனை வாழ்த்தியே தமிழ் நூல்கள் தொடங்குகின்றன.
இறைவன் சாதி, சமயம் கடந்தவன், அவன் இயற்கையின் வடிவம். அவன் மக்கள் எல்லார்க்கும் பொது. பொதுவான இறைவனை வாழ்த்தி வணங்கும் இராமலிங்க அடிகளின் பாடல் உங்களுக்குப் பாடமாக வைக்கப் பெற்றுள்ளது.
திருவருட்பா என்னும் நூல் ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது. நமக்குப் பாடமாக அமைந்துள்ளப் பாடல் இந்நூலில் முதல் திருமுறையில் மகாதேவ மாலை என்னும் பகுதியில் 12ஆம் பாடலாக உள்ளது.