1. வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  கண்ணதாசனுக்குரியப் பட்டம் எது?

அ) கவிச்சக்கரவர்த்தி

ஆ) கவிக்கோ

இ) கவிப்பேரரசு

ஈ) கவியரசு

ஈ) கவியரசு

2.  கண்ணதாசன் பிறந்த ஊர் எது?

அ) காரைக்குடி

ஆ) மதுரை

இ) சிறுகூடல்பட்டி

ஈ) பட்டிவீரன்பட்டி

இ) சிறுகூடல்பட்டி

3.  கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

அ) முத்தையா

ஆ) சாத்தையா

இ) இராமையா

ஈ) சோமையா

அ) முத்தையா

4.  கண்ணதாசன் நடத்திய இதழ் யாது?

அ) திராவிட நாடு

ஆ) தென்றல்

இ) நம்நாடு

ஈ) குடியரசு

ஆ) தென்றல்

5.  கண்ணதாசன் இறுதியாக எழுதியக் காவியம் யாது?

அ) யசோதர காவியம்

ஆ) இராமகாவியம்

இ) இயேசுகாவியம்

ஈ) இராவண காவியம்

இ) இயேசு காவியம்

6.  கண்ணதாசன் பிறந்த ஆண்டு யாது?

அ) 1937

ஆ) 1927

இ) 1947

ஈ) 1957

ஆ) 1927

7.  கண்ணதாசன் மறைந்த ஆண்டு யாது?

அ) 1981

ஆ) 1971

இ) 1961

ஈ) 1918

அ) 1981

8.  கண்ணதாசன் கூறும் ‘மானிடர் வீடு’ எது?

அ) நாடு

ஆ) உலகம்

இ) ஊர்

ஈ) நகரம்

ஆ) உலகம்

9.  ஒவ்வொரு மொழிக்கும் உரியது எது?

அ) உலகம்

ஆ) நாடு

இ) கண்டம்

ஈ) தீவு

ஆ) நாடு

10.  நாம் எவ்வாறு இணைந்து வாழ வேண்டும் எனக் கண்ணதாசன் கருதுகிறார்?

அ) நன்றாய்

ஆ) ஒன்றாய்

இ) உயர்வாய்

ஈ) ஒழுங்காய்

ஆ) ஒன்றாய்