வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  இராமலிங்க அடிகள் எழுதியப் பாடல்கள் ---------- என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இராமலிங்க அடிகள் எழுதியப் பாடல்கள் திருவருட்பா என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

2.  இராமலிங்க அடிகள் வடலூரில் -------------- அமைத்தார்.

இராமலிங்க அடிகள் வடலூரில் சத்திய ஞான சபை அமைத்தார்.

3.  இராமலிங்க அடிகள் -------------- என அழைக்கப்பட்டார்.

இராமலிங்க அடிகள் வள்ளலார் என அழைக்கப்பட்டார்.

4.  திருவருட்பா ----------- பாடல்களைக் கொண்டது.

திருவருட்பா ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது.

5.  நமது பாடப்பகுதி முதல் திருமுறையில் ------------- என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நமது பாடப்பகுதி முதல் திருமுறையில் மகாதேவ மாலை என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

6.  வள்ளலார் வாழ்ந்த காலம் 1823 முதல் ---------- வரை.

வள்ளலார் வாழ்ந்த காலம் 1823 முதல் 1874 வரை.

7.  இறைவன் பொன்னாகவும், -------------, போகமாகவும் விளங்குகின்றான்.

இறைவன் பொன்னாகவும்,மணியாகவும் போகமாகவும் விளங்குகின்றான்.

8.  இறைவன் பொருள்களின் புறமாகவும் ---------- ஆகவும் தோன்றுகின்றான்.

இறைவன் பொருள்களின் புறமாகவும் அகம் ஆகவும் தோன்றுகின்றான்.

9.  இறைவன் மண்ணாகவும், மலையாகவும், ----------- காட்சித் தருகின்றான்.

இறைவன் மண்ணாகவும், மலையாகவும், கடலாகவும் காட்சித் தருகின்றான்.

10.  இறைவன் கருணை பொழிகிற -------------- என விளங்குகின்றான்.

இறைவன் கருணை பொழிகிற முகில் என விளங்குகின்றான்.