மொழி வாழ்த்து
பாட அறிமுகம் 
Introduction to Lesson
            அன்புள்ள மாணவர்களே! வணக்கம்.
மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுவது மொழியாகும். மற்றவர்கேளாடு தொடர்பு கொள்ள இது உதவுகிறது.
தமிழ் மக்களின் தாய்மொழி தமிழேயாகும். அம்மொழி வளர்ந்தால் அம்மக்களும் வளர முடியும். இந்தக் கருத்திற்கு ஏற்பத் தமிழ்மொழி வளர வாழ்த்தும் பாடல் நமக்குப் பாடமாக வந்துள்ளது.