இறை வாழ்த்து
பாடல்
Poem
திருவருட்பா
பொன்னாகி மணியாகி போக மாகிப்
புறமாகி அகமாகிப் புனித மாகி
மண்ணாகி மலையாகிக் கடலு மாகி
மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
முழுதாகி நாதமுற முழங்கி யெங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளம் தேக்க
வியன்கருணை பொழிமுகிலாய் விளங்கும் தேவே!
- இராமலிங்க அடிகள்
