வாழ்த்து

மொழி வாழ்த்து

பாடல் கருத்து
Theme of the Poem


தேனைவிட இனிமையான செந்தமிழ் மொழியே! தென்னாடு பெருமை பெற விளங்கும் தென் மொழியே! உடம்பில் ஒளிவிட்டு விளங்குகிற உயர்ந்த மொழியே! உணர்வுக்கு உணர்வு தந்து ஒளிரும் தமிழ் மொழியே! சிறப்பினால் வானத்தைவிட உயர்ந்த வண்டமிழ் மொழியே! மனிதர்களுக்கு இரண்டு விழிகளாக விளங்கும் நல்ல மொழியே! தானாகவே சிறப்புற்று விளங்கும் தனித்தமிழ் மொழியே! இனியும் தழைத்து இனிது உயர்வாயாக.