மொழி வாழ்த்து
பாடல்
Poem
மொழி வாழ்த்து
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே!
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே!
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!
மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே!
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே!
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
- கா.நமச்சிவாயர்
