உலக வாழ்த்து
ஆசிரியர்அறிமுகம்
Introduction to author 
            
		
கவியரசு எனப் போற்றப்பெறும் கண்ணதாசன் 24-6-1927 அன்று சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். தந்தையார் சாத்தப்பன், தாயார் விசாலாட்சி. இவர் இயற்பெயர் முத்தையா. எனினும், கண்ணதாசன் என்னும் பெயரே இயற்பெயர் போல் நிலைத்துவிட்டது.
தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் முதலிய இதழ்களை நடத்தியவர். எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியவர். சிறுகதைகள், புதினங்கள் படைத்தவர்; ஆட்டனத்தியும் ஆதிமந்தியும், அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம், மாங்கனி முதலிய இலக்கியங்களை இயற்றியவர். தமிழ்நாடு அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவர் 17-10-1981 அன்று இயற்கை எய்தினார்.