மொழி வாழ்த்து
ஆசிரியர்அறிமுகம்
Introduction to author
இப்பாடலை எழுதியவர் கா.நமச்சிவாயர். இவர் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் 10.2.1876 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் இராமசாமி, அகிலாண்டவல்லி. இவர் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்து, மயிலை சண்முகம் என்பாரிடம் தமிழ் பயின்று பேராசிரியராக உயர்ந்தார். இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். நல்லாசிரியர் என்னும் இதழை நடத்தினார். தம் 60ஆம் வயதில் இயற்கை எய்தினார்.