1. வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  கண்ணதாசன் எவ்வாறு போற்றப் பெறுகிறார்?

கண்ணதாசன் கவியரசு என்று போற்றப் பெறுகிறார்.

2.  கண்ணதாசன் எங்குப் பிறந்தார்?

கண்ணதாசன் 24-6-1927 அன்று சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.

3.  கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?

கண்ணதாசனின் பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி ஆவர்.

4.  கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும்.

5.  கண்ணதாசன் நடத்திய இதழ்கள் யாவை?

கண்ணதாசன் நடத்திய இதழ்கள் தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் முதலியவையாகும்.

6.  கண்ணதாசன் எழுதிய நூல்கள் சிலவற்றைக் கூறுக.

அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம், மாங்கனி முதலியவை கண்ணதாசன் எழுதிய நூல்களாகும்.

7.  தமிழ்நாடு அரசு கண்ணதாசனை எவ்வாறு சிறப்பித்தது?

தமிழ்நாடு அரசு கண்ணதாசனை அரசவைக் கவிஞராக ஆக்கிச் சிறப்பித்தது.

8.  உலகம் ஒன்று என்பதற்கு கண்ணதாசன் காட்டும் உவமைகள் யாவை?

ஒரே வானம், ஒரே நிலவு என்பவை உலகம் ஒன்று என்பதற்குக் கண்ணதாசன் காட்டும் உவமைகள் ஆகும்.

9.  உலகம் யாருடைய வீடாகும்?

உலகம் மானிடர்களின் வீடாகும்.

10.  உலகில் நமது கடமை யாது?

உலகில் நாம் ஒன்றாக இணைந்து எப்போதும் வாழவேண்டும்.