வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  இராமலிங்க அடிகள் எழுதிய நூல் எது?

அ) திருப்புகழ்

ஆ) திருக்குறள்

இ) திருவருட்பா

ஈ) தேவாரம்

இ) திருவருட்பா

2.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?

அ) மதுரை

ஆ) மருதூர்

இ) சிதம்பரம்

ஈ) வடலூர்

ஆ) மருதூர்

3.  இராமலிங்க அடிகளாருக்கு வழங்கப்பெறும் சிறப்புப் பெயர் யாது?

அ) வள்ளலார்

ஆ) அடியார்

இ) ஞானியார்

ஈ) அறிஞர்

அ) வள்ளலார்

4.  திருவருட்பாவில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை?

அ) 1330

ஆ) ஐந்தாயிரம்

இ) ஆயிரம்

ஈ) ஆறாயிரம்

ஈ) ஆறாயிரம்

5.  திருவருட்பாவில் நம் பாடப்பகுதி இடம்பெற்ற திருமுறை எது?

அ) ஐந்தாம் திருமுறை

ஆ) முதல் திருமுறை

இ) ஆறாம் திருமுறை

ஈ) மூன்றாம் திருமுறை

ஆ) முதல் திருமுறை

6.  வடலூரில் இராமலிங்க அடிகள் அமைத்த சபையின் பெயர் யாது?

அ) சைவ சபை

ஆ) பொது நல சபை

இ) சத்திய ஞான சபை

ஈ) சகல சமய சபை

இ) சத்திய ஞான சபை

7.  இறைவன் எந்த வடிவில் இருக்கின்றான்?

அ) கோயில்

ஆ) சிலை

இ) இயற்கை

ஈ) செயற்கை

இ) இயற்கை

8.  கருணை முகில் பொழியும் வெள்ளம் யாது?

அ) இன்பம்

ஆ) பக்தி

இ) அன்பு

ஈ) ஆசி

அ) இன்பம்

9.  பொன்னாகவும், மணியாகவும் இருப்பவன் யார்?

அ) ஞானி

ஆ) அரசன்

இ) இறைவன்

ஈ) முனிவர்

இ) இறைவன்

10.  இறைவன் எவ்வாறு விளங்குகிறான்?

அ) விரிந்த வான்

ஆ) கருணை முகில்

இ) ஒளிரும் விண்மீன்

ஈ) வீசும் தென்றல்

ஆ) கருணை முகில்