உலக வாழ்த்து
பாடல்
Poem
உலக வாழ்த்து
ஒன்றே வானம் ! ஒன்றே நிலவு !
ஒன்றே இதயம் ! ஒன்றே உறவு !
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாடு !
உலகம் யாவும் மானிடர் வீடு !
உரிமை காப்போம் ; உறவையும் காப்போம்;
ஒன்றாய் இணைந்து என்றும் வாழ்வோம்.
- கண்ணதாசன்
