வாழ்த்து

மொழி வாழ்த்து

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?

கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம்.

2.  கா.நமச்சிவாயர் எப்போது பிறந்தார்?

கா.நமச்சிவாயர் 10.2.1876 அன்று பிறந்தார்.

3.  கா.நமச்சிவாயரின் பெற்றோரைப் பற்றிக் குறிப்பிடுக.

கா.நமச்சிவாயரின் பெற்றோர் இராமசாமி மற்றும் அகிலாண்டவல்லி ஆவர்.

4.  கா.நமச்சிவாயர் வாழ்வில் எவ்வாறு உயர்ந்தார்?

கா.நமச்சிவாயர் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்து கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்தார்.

5.  கா.நமச்சிவாயர் யாரிடம் தமிழ் பயின்றார்.

கா.நமச்சிவாயர் மயிலை சண்முகம் என்பாரிடம் தமிழ் பயின்றார்.

6.  கா.நமச்சிவாயர் நடத்திய இதழ் யாது?

கா.நமச்சிவாயர் ‘நல்லாசிரியர்’ என்னும் இதழை நடத்தினார்.

7.  கா.நமச்சிவாயர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களைப் பற்றி கூறுக.

கா.நமச்சிவாயர் இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

8.  செந்தமிழின் இனிமையைக் கூறுக.

செந்தமிழ் தேனினும் இனியது.

9.  தமிழ் மொழி விளங்கும் தாயகம் யாது?

தமிழ்மொழி தென்னாட்டைத் தாயகமாகக் கொண்டு விளங்குகிறது.

10.  வண்டமிழ் மொழியின் வளர்ச்சியைக் கூறுக.

வண்டமிழ் மொழி வானினும் ஓங்கிய வளர்ச்சி கொண்டது.