இறை வாழ்த்து
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

இந்த இறைவாழ்த்துப் பகுதியின் பாடல் ஆசிரியர் இராமலிங்க அடிகள். இவர் வாழ்ந்த காலம் 1823 முதல் 1874 வரை. இவரது பெற்றோர் இராமையா, சின்னம்மை ஆவர். பிறந்த ஊர், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர். இவரின் சிறப்புப் பெயர்கள் வள்ளலார் மற்றும் அருட் பிரகாசர்.
இவர் எழுதியப் பாடல்கள் திருவருட்பா என்னும் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவர் வடலூரில் சத்திய ஞானசபை அமைத்தார். அங்கு அறிவையும், உணவையும் மக்களுக்கு அளித்தார். இதனால் இவர் வடலூர் வள்ளலார் என அழைக்கப் பெற்றார்.