வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலம் யாது?

இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலம் 1823 முதல் 1874 வரையாகும்.

2.  வள்ளலாரின் பெற்றோர் யாவர்?

வள்ளலாரின் பெற்றோர் இராமையா, சின்னம்மை.

3.  இராமலிங்க அடிகளின் சிறப்புப் பெயர்களுள் இரண்டனைக் கூறுக.

இராமலிங்க அடிகளின் சிறப்புப் பெயர்கள் வள்ளலார் மற்றும் அருட்பிரகாசர் என்பவையாகும்.

4.  இராமலிங்க அடிகள் எழுதியப் பாடல் தொகுதியின் பெயர் யாது?

இராமலிங்க அடிகள் எழுதியப் பாடல் தொகுதியின் பெயர் திருவருட்பா.

5.  இராமலிங்க அடிகள் வடலூர் வள்ளலார் என அழைக்கப்பெற்றக் காரணம் யாது?

சத்திய ஞான சபை அமைத்து மக்களுக்கு ஞானமும் உணவும் அளித்ததால் வடலூர் வள்ளலார் என அழைக்கப்பெற்றார்.

6.  திருவருட்பாவில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

திருவருட்பாவில் ஆறாயிரம் பாடல்கள் உள்ளன.

7.  நமது பாடப்பகுதியின் இறைவாழ்த்துப் பாடல் அமைந்த பகுதி யாது?

திருவருட்பாவில் முதல் திருமுறையில் ‘மகாதேவ மாலை’என்னும் பகுதி அமைந்துள்ளது.

8.  இறைவன் எவ்வாறு விளங்குகின்றான்?

இறைவன் பொன்னாகவும், மணியாகவும், இன்பமாகவும் விளங்குகின்றான்.

9.  இறைவன் பொருள்களில் எவ்வாறு தோன்றுகின்றான்?

இறைவன் பொருள்களுக்கு உள்ளும் புறமும் தோன்றுகின்றான்.

10.  இறைவன் காட்சித் தருவதை விவரி.

இறைவன் மண், மலை, கடல், நிலவு, சூரியனாகக் காட்சித் தருகிறான்.