1. வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கண்ணதாசன் --------- எனப் போற்றப் பெற்றார்.

கண்ணதாசன் கவியரசு எனப் போற்றப் பெற்றார்.

2.  கண்ணதாசன் ----------- அன்று பிறந்தார்.

கண்ணதாசன் 24-6-1927 அன்று பிறந்தார்.

3.  கண்ணதாசனின் தாயார் பெயர் ------------ .

கண்ணதாசனின் தாயார் பெயர் விசாலாட்சி .

4.  கண்ணதாசன் என்னும் பெயரே ------- போல் நிலைத்துவிட்டது.

கண்ணதாசன் என்னும் பெயரேஇயற்பெயர் போல் நிலைத்துவிட்டது.

5.  கண்ணதாசன் எண்ணற்ற திரைப்படங்களுக்குப் -------- எழுதியவர்.

கண்ணதாசன் எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.

6.  கண்ணதாசன் சிறுகதை, ------------ படைத்தவர்.

கண்ணதாசன் சிறுகதை, புதினம் படைத்தவர்.

7.  கண்ணதாசன் ------- அன்று இயற்கை எய்தினார்.

கண்ணதாசன் 17-10-1981 அன்று இயற்கை எய்தினார்.

8.  ஒன்றே வானம் ; ஒன்றே -----------.

ஒன்றே வானம் ; ஒன்றே நிலவு.

9.  ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு --------.

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாடு.

10.  உரிமை காப்போம், -------- காப்போம்.

உரிமை காப்போம், உறவையும் காப்போம்.