வாழ்த்து

இறை வாழ்த்து

பாடல் கருத்து
Theme of Poem


இறைவன் பொன்னாகவும், மணியாகவும், இன்பமாகவும் விளங்குகின்றான். பொருள்களுக்கு வெளியிலும், உள்ளும் தோன்றுகின்றான். தூய்மையாக உள்ளான். மண்ணாகவும்,மலையாகவும், கடலாகவும், நிலவாகவும் சூரியனாகவும் காட்சி தருகின்றான். உலகம் தோன்றுவதற்கு முன்னும், அழிந்த பின்னும் இடைப்பட்டக் காலத்திலும் முழுமையாகி,ஒலி முழக்கமாக, எங்கும் ஒளியாகப் பரவி, மெய்யறிவுடன் விளங்குகின்றான். இன்பமாகிய வெள்ளத்தைப் பெருகச் செய்து, அருளைப் பொழிகின்ற முகிலாக விளங்குகின்றான்.