மொழி வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. கா.நமச்சிவாயர் ------------ அன்று பிறந்தார்.
கா.நமச்சிவாயர் 10.2.1876 அன்று பிறந்தார்.
2. கா.நமச்சிவாயர் மயிலை -------------- என்பாரிடம் தமிழ் பயின்றார்.
கா.நமச்சிவாயர் மயிலை சண்முகம் என்பாரிடம் தமிழ் பயின்றார்.
3. கா.நமச்சிவாயர் ----------- என்னும் இதழை நடத்தினார்.
கா.நமச்சிவாயர் நல்லாசிரியர் என்னும் இதழை நடத்தினார்.
4. கா.நமச்சிவாயரின் தந்தையார் பெயர் -------------.
கா.நமச்சிவாயரின் தந்தையார் பெயர் இராமசாமி.
5. கா.நமச்சிவாயரின் தாயார் பெயர் -------------.
கா.நமச்சிவாயரின் தாயார் பெயர் அகிலாண்ட வல்லி.
6. கா.நமச்சிவாயர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து -------- ஆக உயர்ந்தார்.
கா.நமச்சிவாயர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து பேராசிரியர் ஆக உயர்ந்தார்.
7. தமிழ் தேனினும் ---------- என்பதில் ஐயமில்லை.
தமிழ் தேனினும் இனியது என்பதில் ஐயமில்லை.
8. வானினும் ஓங்கிய ---------- மொழியாகும்.
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியாகும்.
9. மாந்தருக்கு இருகண்களாய் விளங்குவது --------- யாகும்.
மாந்தருக்கு இருகண்களாய் விளங்குவது தமிழ்மொழி யாகும்
10. சிறப்பு மிக்க --------- மொழி தமிழாகும்.
சிறப்பு மிக்க தனித்தமிழ் மொழி தமிழாகும்.