2.
கடிக்கம்பலை
|
இதன்கண் : உதயணன் திருமணநாளை
ஆராய்ந்துரைக்கும் கணிகள் சிறப்பும், வள்ளுவன் திருமணநாளை முரசறைந்து நகர்க்கு
அறிவித்தலும், நகரமாந்தர் இல்லங்களை ஒப்பனை செய்தலும், அறக்கோட்டமும், ஆண்டு
நிகழ்வனவும், பணிமகளிர் செயலும், அருகன் கோயிலின்கண் நிகழ்வனவும், தெருக்களை
அணிசெய்வார் செயலும், முதுவணிகர் மொழிவனவும், தாயர் மக்களை அணிந்து விடுதலும்,
களிமாக்கள் செயலும், பாகர் யானைகளை நடத்தி வருதலும் மங்கலநீர் ‘கொணர்தற்குரிய
மகளிர் செயலும், பிறவும் ஓதப்படும், |
|
5 |
பொலிந்த சும்மையொடு பொன்அணி மூதூர் மலிந்துஅகம் புக்கபின் மண்பொறை
கூரப் பெறலரும் பெருங்கிளை இறைகொண்டு ஈண்டி இன்மகிழ் இருக்கை ஏயர்
மகனோடு தண்மகிழ் நெடுங்குழல் தத்துஒளித் தாமத்து மதிக்கவின் அழித்த மாசுஅறு
திருமுகத்து தணிக்கவின் கொண்ட ஐஅரித் தடங்கண் வனப்புவீற்று இருந்த வாசவ
தத்தை வதுவைச் செல்வம் விதியில் கூறுவென்
|
உரை |
|
10
15 |
எண்தரும் பெருங்கலை ஒண்துறை
போகிக் கண்அகன் புணர்ப்பில் கவின்பெற நந்தி விண்ணகம் விளங்கு மேதகு
நாட்டத்த நூற்பொருன் உணர்ந்து பாற்பொருள் பன்னி நூற்பொருள் இனித்துத் தீப்பொருள் ஒரீஇ அலகை வேந்தன்கு லகங்
கொண்ட ஒழுக்க நுனித்த வழுக்கா மரபின் புணர்ப்பியல் காட்சியன் புரையோர் புகழ
|
உரை |
|
20 |
நிழல்பெருங் குடையும் நேர் ஆசனமும் செருப்பொடு புகுதலும் சேனை
எழுச்சியும் யானையும்
தானையும் ஏனைய பிறவும் மண்ணகக் கிழவர் மனக்கோள்
அறாது விண்ணகக் கிழவனின் விழுப்பம் கூரித் தம்மிற் பெற்ற தவம்புரி
தருக்கத்து அரும்பரி சாரத்துப் பெருங்கணி வகுத்த
|
உரை |
|
25 |
நன்னாள் இதுஎனப் பன்னாடு அறியப் பசும்பொன் பலவார் விசிந்து
பிணிஉறீஇக் கோதை முத்தொடு தாமம்
ததைஇ ஏற்றுரி போர்த்த இடிஉறழ் தழங்குரல் கோல்தொழில் வேந்தன் கொற்ற முரசம்
|
உரை |
|
30
35 |
பெரும்பணைக் கொட்டிலுள்
அரும்பலி ஓச்சி முற்றவை காட்டிக் கொற்றவை
பழிச்சித் திருநாள் படைநாள் கடிநாள் என்றுஇப் பெருநாட்கு அல்லது பிறநாட்கு
அறையாச் செல்வச் சேனை வள்ளுவ முதுமகன் நறுவெண் சாந்தொடு மாலை அணிந்து மறுவில் வெண்துகில் மருங்குஅணி
பெறீஇ அணைமிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்துப் பணையெருத்து ஏற்றிப் பல்லவர் சூழத்
|
உரை |
|
40 |
தேர்திரி மறுகுதோறு ஊர்முழுது அறியப் பொலிக வேல்வலம் புணர்க
பூமகள் மலிக மண்மகள் மன்னுக மன்னவன் மல்லல் மூதூர்ப் பல்லவர்
கேள்மின் திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகுமின
|
உரை |
|
45
50
55 |
பல்களிற்று யானைப்
படைப்பெரு வேந்தன் மெல்இயல் குலமகள் மிடைமணிப்
பைம்பூண் சிலம்புஒலிச் சீறடிச் சென்றுஏந்து
புருவத்து இலங்குஒளி வாள்கண் இன்நகைத் துவர்வாய் வாசவ தத்தையொடு வதுவை கூடிக் கோல நீள்மதில் கொடிக்கோ
சம்பி மாலை மன்னவன் மணமகன் ஆகும் காலை இதுஎனக் கதிர்மணிக்
கடுப்பிண் கண்அதிர்ந்து இயம்ப இண்மொழி
பயிற்றிக் கல்என அறையும் ஒல்என் கம்பலை அறைந்துஅறி உறீஇய பின்றை நிறைந்த
|
உரை |
|
60 |
பெரும்பெயர் மூதூர் விரும்புபு
துவன்றிப் படைஅமை நெடுமதில் கடைமுகம்
தோறும் பசும்பொன் தோரணம் விசும்புஉற நாட்டி அரும்பொன் தாரோடு அணிகதிர்
முத்தின் இரும்பெரும் தாமம்
ஒருங்குடன் வளைஇ
|
உரை |
|
65 |
உத்தம
வேழத்து உயர்புறம் பொலிய வித்தக வெண்குடை விரகுளி கவிப்ப மணிக்கைக் கவரி மாபின் வீசுநர் புடைக்களிறு ஒருங்குடன் புகூஉம்
அகலத்து அடைப்புஅமை பெரும்பொறி யாப்புமுதல் கொளீஇப் பத்திரம் அணிந்த சிந்திரக்
கதவின் வாயில் தோறும் வலத்தும் இடத்தும்
|
உரை |
|
70
75 |
தாயில் மாடத்துத் தாள்முதல் எல்லையுள் சதிரத் திண்ணைத் தண்பூம்
பந்தருள் பழுக்காய்க் குலையும் பழங்காய்த் துணரும் களிக்காய்க் பறியும் துவர்க்காய்
உம்பலும் பளிக்காய்க் குப்பையும் பலம்பெய் பேழையும் தளிர்இலை வட்டியொடு தாதுபல
அமைத்துச் சுண்ணப் பெருங்குடம் பண்அமைத்து இரீஇ எண்ணாது ஈயுநர் இன்மொழிக் கம்பலும்
|
உரை |
|
80
85 |
தண்நிழல் பொதிந்த வெண்மணல் பந்தர் கண்உறக் கவினிக் கைப்புடை
நிறைந்த செல்வச் சாலையொடு பல்வழி எல்லாம் அந்த ணாளரொடு அல்லோர்
பிறர்க்கும் அமுதிண் அன்ன
அறுசுவை அடிசில் நெய்ச்சூட்டு அமைந்த சிற்றூண்
பந்தரோடு எப்பொழுது ஆயினும் அப்பொழுது ஈயும் துமம் நவின்ற நாமக்
கைவினை மடைத்தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற அறச்சோற்று அட்டில் அகத்தும் புறத்தும் முரண்கோல் இளையர் அரண்மாட்டு
இயற்றி முட்டாது நடாஅம் அட்டூண் கம்பலும்
|
உரை |
|
90
95
100 |
பவழப் பட்டத்துப் பளிக்குமணித் தூணின் திகழ்பொன் போதிகைச் செம்பொன்
செழும்சுவர் வெள்ளி வேயுள்
வெள்ளிஅம் பலகைப் பீடுகை நிரைத்த மாட மறுகில் கொடுப்போர் வீழ்த்த குங்குமக்
குழையலும் தொடுப்போர் வீழ்த்த துவெள் அலரும் வேதியர் கடைத்தலை வேள்விச் சமிதையும் வாதிகர் கடைத்தலை
வாசச் சுண்ணமும் கலந்தோர் உதிர்த்த கலவைச்
சாந்தமும் புலந்தோர்
பரிந்த புதுப்பூ
மாலையும் சிறாஅர்
வீழ்த்த செம்பொன் கண்ணியும் அறாஅ மறுகின் ஆவணப் பலியும் பசுங்காய் தெவிட்டும் பற்கூட்டு
அரத்தமும் இயங்குநர் இன்புற இன்னவை பிறவும் காட்டெனக் கமர்ந்து கூட்டுநர் அமைத்த
|
உரை |
|
105 |
கலவைக் கொழுங்களி எழுதுகள் அவித்து வெறிக்களம் கடுப்ப வீதியும் முற்றமும் நிறைப்போது பரப்பி நெடுங்கடை
தோறும் அணித்தகை சிதைத்தனர் இவர்என ஆடும் முனித்தலைச் சிறாரை முன்இல்
வாங்கித் தாயரைக் காட்டிஅவர் தவறுஎடுத்து
உரைக்கும் ஏவல் மகளிர் வாய்மொழிக் கம்பலும்
|
உரை |
|
110
115 |
வண்ணக் கல்ங்கத்துக்
கண்ணறைக் கண்டம் தலையொடு தலைவர இலையடுக்கு
இரீஇக் கச்சுவாய் கோடித்து முத்துப்புரி நாற்றி ஒண்மணித் தாரொடு பன்மணிப்
புளகம் விலங்கும் நீளமும் இலங்கித் தோன்றி மிழற்றுபு விளங்கும் எழில்பொலிவு
எய்த வல்வவன் புனைந்த பல்வகைக் கம்மத்து மங்கலப் பெருங்கொடி மங்குல்வா னத்துள்
|
உரை |
|
120
125 |
உரற்றும்மழை கிழிக்கும் ஒண்மணி
உச்சிப் பல்லோர் காணும் பரூஉத்திரள் அடியிற் பன்மணிக் கண்டத்துக் கண்நிழல்
கலங்கி ஓங்குபு நிமிர்ந்த காம்பொடு கவ்விப் பயில்பூம் பத்திக் குயில்புரை
கொளுவின. வட்டமைத்து
இயற்றிய வலம்புரி சாற்றி ஆடகப் பொன்கயிற்று அரும்பொறி யாப்பின வயிரப் பல்அரிப் பயில்பூம் பத்திக்
கிண்கிணித் தாரொடு கலவிய கதிர்அணி கொளுவொடு படாஅக் கொடிப்பவ ழத்துத் தாமம் தாழ்ந்து தலைமுதல் கோத்த நீலக் காழ்மிசை நெற்றி மூழ்கி
|
உரை |
|
130 |
உள்நுகுப்பு ஓலையுள் கண்விரித்து இயற்றிய பாத சக்கரம் ஆறுஎதிர்
நீர்தரக் கோதைத்
தாமமொடு கொட்டைமுதல் கோத்த இலங்கொளி முக்குடை எந்திரத்து இயங்க
|
உரை |
|
135 |
அறிவர் சரிதம் முறையில் சுட்டி உரையும் ஓத்தும் புரையாப்
புலமைப் பெரியோர் நடாவுந் திரியாத் திண்நெறி ஒராஅ உலகிற்கு ஓங்குபு
வந்த அராஅந் தாணத்து அருச்சனைக் கம்பலும்
|
உரை |
|
140
145 |
கண்ணில் கண்ட நுண்வினைக் கம்மம் கையில் புனையும் கழிநுண்
ஆளர் ஏட்டிணும் கிடையினும் மூட்டமை கிழியினும் நாற்றமும் தோற்றமும் வேற்றுமை
இன்றி ஏற்ப விரீஇய இலையும் கொழுந்தும் கொழுந்திற்கு எற்ற அழுந்துபடு குலாவும் குலாவிற்கு அமைந்த கோலச்
சந்தியும் முகிழும் போதும் மகிழ்சுழல் அலரும் அன்னவை பிறவும் பன்மரம்
பண்ணித் தீட்டினர் அன்றியும் நாட்டினர் நிறீஇக்
|
உரை |
|
150
155 |
கழைமுதல் கொளீஇக் கைபுனை வனப்பின் இழைமுதல் கொளீஇய எழில
ஆகிக் காம வல்லியும் கதலிகை அணிந்த தாம வல்லியும் தண்பெரும்
படாகையும் காலேந் திரமும் கைவயின் பிரியா நூலேந் திரமும் நோக்கினர் போகாப் பத்திப் படாமும் சித்திரக்
கொடியும் இன்னோர் அன்ன என்னோர் சேரியும் உறப்புணர்த்து ஆர்க்கும் சிறப்பொலிக் கம்பலும்
|
உரை |
|
160 |
இடிஉறழ் முரசின் இறைமகன் அணியும் முடிஅணி ஒழிய முற்றணிப் பெருங்கலம்
யாவர் வேண்டினும் யாவரும்
ஈமின் ஈத்ததின்
இரட்டி கோத்தரும் நுமக்கென நாற்பெருந் திசையும் நகர்அங்
காடியுள் வாய்த்த செய்தொழில் வாணிகர்க்கு
அறையும் கோப்பெரு முதியர் வாய்ப்பறைக் கம்பலும்
|
உரை |
|
165
170 |
குடிக்கணி கொடுக்கும்
கொற்றத் தானை இடிக்கண் முரசின் ஏயர்
பெருமகன் வதுவை நாப்பண் புதுவது
புணர்ந்து நுந்தையர்
தம்மொடு செலீஇ எந்தையர் வருக ஈண்டுஎன வறிதின் ஓடும் தம்மமர் புதல்வரைத் தலைஅடி
காறும் கம்மப் பல்கலம் கைபுனைந்து
அணிந்து செம்மலின் விடுக்கும் சிறந்த
சாயல் அம்மென்
கூந்தல் அரிவையர் கம்பலும்
|
உரை |
|
175
180
185 |
வத்தவர் இறைவன் வதுவையுள் நம்மோடு ஒத்தவர் வரிசை ஒத்துப்
புகுதலின் பத்திப்பட
நிரைத்த பைங்குலைத் தாறும். தேங்கின் ஊறலும் தேம்பிழித்
தேறலும் தாங்கரும் பெண்ணைப் பூங்குலை
அமுதமும் மதுவும் சீதமும் புதுமலர் வேரியும் உக்கிர ஊறலும் சிக்கரத்
தெளியலும் .
.. . . . . .. . . காஞ்சியத்
தெளிவும்
கரும்பின் ஊறலும் பெரும்பொதித்
தேனும் இவையும்
பிறவும் சுவைதெரி யாளர் விட்டுஉணல் ஆற்றா மட்டுமலி நறுங்கள் பெய்ம்மின் தம்மின் ஈமின்
பிறர்க்கெனத் தம்மில் தோறும் உண்மகிழ்ந்து
உரைக்கும் கள்உண் ணாளர் ஒள்ஒலிக் கம்பலும்
|
உரை |
|
190
195 |
மாற்றுத்தொழில் மன்னர் மயங்கிய
ஞாட்பினுள் கூற்றுத்தொழில் இளையர் குடர்சூடு மருப்பின வெம்படை மிகப்பலர் மெய்ம்மிசை
எறியினும். தம்படைக்கு ஒல்காப் பண்புடன்
பயிற்றி மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅரென நாற்பா லோரையும் நூற்பாற்
செய்தொழில் பாகர் வேண்டினும் பையுள் செய்யா வேக உள்ளத்து வேழம் தெரிந்து
|
உரை |
|
200
205 |
நிரந்தன
காட்டிய நேயம் தோன்றப் பார்படு முத்தொடு தாருடன்
பூட்டி ஐவகை
வண்ணத்துக் கைவல் கம்மியர் கொடியும் பத்தியும் வடிவுபட எழுதிச் சூழியும் ஓடையும் சுடர்மணிக்
கோவையும் ஊழறிந்து உயர்ந்த உத்தம உயர்ச்சிய மண்ணுநீர் சுமக்கற்குப் பண்ணுமுறை
பிழையாக் கோல யானை நாலிரண்டு மிகையா ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் பாகுஇயல் உள்ளத்துப் பாகர் கம்பலும்
|
உரை |
|
210
215 |
மணிஅரி
அடக்கிய மாண்வினைப் பகுவாய் அணிமிழற்று அரவத்து அம்பொன்
கிண்கிணி சிலம்பொடு சீறடிப் புறம்புதைந்து அரற்றவும் அம்மென் மருங்குல் அசைய அடிபரந்த கொம்மை கொண்ட தன்மைய
ஆகிக் கோங்கரும் பழித்த வீங்குஇள மென்முலை உட்பட விட்ட வட்ட
நுடக்கத்துச் சுண்ண இலேகை வண்ணம்
சிதைய மண்ணிய நித்தில வடத்தொடு புரளும் பல்கலஞ் சுமத்தல் ஆற்றாது
பைம்என ஒல்குபு நுடங்கும் ஒருபிடி நுசுப்பினர்
|
உரை |
|
220 |
மண்ணக மருங்கின் மதிபல பயின்றன விண்ணகம் என்னையும் விடுக்குங்
கொல்என மதியகம் வெள்க வனப்பொடு புணர்ந்த கதிர்விடு திருமுகத்து எதிர்வன
போலச் சென்றுவந்து உலாவும் சேஅரிக் கண்ணினர் ஈன்றோர் மாட்டும் எதிர்முகம்
நோக்காது மான்தோம் கூறும் மம்மர் நோக்கினர்
|
உரை |
|
225 |
பொன்அணி கொண்ட பூந்தண் சிகழிகைக் கன்னிமகளிர் கண்அணங்கு உறூஉம் ஒவ்வா அணியினர் ஒப்பக்
கூடி மண்ணகக் கிழவன்கு மண்ணுநீர் சுமக்கும் புண்ணியம் உடையீர் போதுமின் ஈங்குஎன வாயில்
தோறும் வந்துஎதிர் கொள்ளப்
|
உரை |
|
230
235 |
போர்வை மடக்கார் பொலியப்
புகுதரும் கோயில் மகளிர் கோல மெல்அடி நூபுரம் கலந்த பாடகக்
கம்பலும் அன்னவை பிறவும் பன்னூறுஆயிரம் ஒடிவில் கம்பலை ஒருங்குதலைக் கூடிக் கடிகமழ் செல்வம் கலந்துஎன்றால் நகர்என்,
|
உரை |
|