படித்ததோடு இருந்துவிடாதே
பாடஅறிமுகம்
Introduction to Lesson
படிப்பது என்பது பணம் தேடுவதற்கு மட்டும் இல்லை. படித்தவற்றை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்; பணமும் பெறலாம்; மகிழ்வாகவும் இருக்கலாம். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தம் பாடலில் படித்த கல்வியை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்.
அவரின் ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே என்ற பாடல் பாடமாக இங்கு உள்ளது.