வருகின்ற பாரதம்
பாடல் கருத்து
Theme of the Poem
கண்களில் ஒளி உடையவர்களே வாருங்கள். மனத்தில் உறுதி உடையவர்களே வாருங்கள். மகிழ்ச்சியான சொற்களைப் பேசுபவர்களே வாருங்கள். வலிமையான தோள்களை உடையவர்களே வாருங்கள். தெளிவான அறிவை உடையவர்களே வாருங்கள். கொடுமைகளைக் கண்டு கோபம் கொள்பவர்களே வாருங்கள். ஏழ்மையைக் கண்டு இரக்கம் கொள்பவர்களே வாருங்கள். சிங்கம் போன்ற நடையை உடையவர்களே நாட்டை வளமாக்க வாருங்கள்!