மறுமலர்ச்சிப் பாடல்கள்

நம்பிக்கை

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  செயபாலன் எந்நாட்டுக் கவிஞர்?

அ) தமிழ்நாடு

ஆ) ஈழம்

இ) மலையாளம்

ஈ) சிங்கப்பூர்

ஆ) ஈழம்

2. ‘நெடுந்தீவு’ - எந்த நாட்டில் உள்ளது?

அ) இலங்கை

ஆ) இந்தியா

இ) பிலிப்பைன்சு

ஈ) தாய்லாந்து

அ) இலங்கை

3.  செயபாலன் எழுதிய கவிதைத் தொகுப்பு

அ) குறுந்தொகை

ஆ) நெடுந்தொகை

இ) எட்டுத்தொகை

ஈ) மலரும் மாலையும்

ஆ) நெடுந்தொகை

4.  வரால் மீன் என்பது

அ) ஆற்றில் வாழும் மீன்

ஆ) குளத்தில் வாழும் மீன்

இ) கிணற்றில் வாழும் மீன்

ஈ) குட்டையில் வாழும் மீன்

அ) ஆற்றில் வாழும் மீன்

5.  வன்னி என்னும் ஊர் எங்கு உள்ளது?

அ) இந்தோனேசியா

ஆ) இலங்கை

இ) ஈழம்

ஈ) மலேசியா

இ) ஈழம்

6.  வன்னி என்னும் ஊரைச் சேர்ந்த ஆற்றில் கோடைக்காலத்தில் எது இல்லை?

அ) மீன்

ஆ) நாணல்

இ) ஆலம் விதைகள்

ஈ) தண்ணீர்

ஈ) தண்ணீர்

7.  வன்னி ஆற்றின் மீன்கள் என்ன செய்தன?

அ) துள்ளின

ஆ) குதித்தன

இ) மூச்சு வாங்கின

ஈ) நீந்தின

இ) மூச்சு வாங்கின

8.  மீன்கள் எவற்றுள் சென்று மூச்சு வாங்கின?

அ) கோரைப் புல்

ஆ) நாணல் புல்

இ) அருகம் புல்

ஈ) தட்டைப் புல்

ஆ) நாணல் புல்

9.  கோடையின் கொடுமையையும் போரின் கொடுமையையும் பாடிய கவிஞரின் பெயர் என்ன?

அ) செயங்கொண்டார்

ஆ) அவ்வையார்

இ) வ.ஐ.ச. செயபாலன்

ஈ) காசி ஆனந்தன்

இ) வ.ஐ.சு. செயபாலன்

10.  கோடையிலும் மழை வரும் என்ற வன்னிச் சிறானின் நம்பிக்கை எதனைக் காட்டுகிறது?

அ) அமைதி

ஆ) சமாதானம்

இ) விடுதலை

ஈ) தீர்வு

(இ) விடுதலை