நம்பிக்கை
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. கவிஞர் செயபாலன் ஓர் ---------------- கவிஞர்.
கவிஞர் செயபாலன் ஓர் ஈழத்துக்கவிஞர்.
2. செயபாலன் ---------- துன்பத்தைக் கவிதையில் வடித்தார்.
செயபாலன் போரின் துன்பத்தைக் கவிதையில் வடித்தார்.
3. நம்பிக்கை என்னும் கவிதை -------------- மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நம்பிக்கை என்னும் கவிதை வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
4. கவிஞர் செயபாலன் எழுதிய நூல் ஈழத்து மண்ணும் --------- முகங்களும் ஆகும்.
கவிஞர் செயபாலன் எழுதிய நூல் ஈழத்து மண்ணும் எங்கள்முகங்களும் ஆகும்.
5. நம்பிக்கை என்னும் கவிதை ---------- நூலில் உள்ளது.
நம்பிக்கை என்னும் கவிதை நெடுந்தொகை என்னும் நூலில் உள்ளது.
6. குயிலின் --------------- போல ஆற்றுநீர் கசிந்தது.
குயிலின் சோகம்போல ஆற்றுநீர் கசிந்தது.
7. வன்னிச் சிறான் ------------- குரலெடுத்துப் பாடினான்.
வன்னிச் சிறான் இனிய குரலெடுத்துப் பாடினான்.
8. ஆற்று மீன்கள் தண்ணீர் இல்லாததால் ---------------- புற்களுக்கள் மூச்சு வாங்கின.
ஆற்று மீன்கள் தண்ணீர் இல்லாததால் நாணல் புற்களுக்கள் மூச்சு வாங்கின.
9. கோடை ஆனாலும் மழை வரும் என்று நம்பிக்கையுள்ளவன் ------------ சிறுவன்.
கோடை ஆனாலும் மழை வரும் என்று நம்பிக்கையுள்ளவன் வன்னிச்சிறுவன்.
10. கோடைக்காலக் காட்சியையும், போர்க்காட்சியையும் பாடிய கவிஞர் பெயர் ----------------
கோடைக்காலக் காட்சியையும், போர்க்காட்சியையும் பாடிய கவிஞர் பெயர் செயபாலன்.