படித்ததோடு இருந்துவிடாதே
பயிற்சி - 3
Exercise 3
1. ‘ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே’ - என்னும் பாடலை எழுதியவர்
அ) பாட்டுக்கொரு புலவன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புரட்சிக் கவிஞர்
ஈ) கண்ணதாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த ஆண்டுகள்
அ) 29
ஆ) 39
இ) 49
ஈ) 59
அ) 29
3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வேறு பெயர்
அ) உவமைக்கவிஞர்
ஆ) தேசியக் கவிஞர்
இ) மக்கள் கவிஞன்
ஈ) குழந்தைக் கவிஞர்
இ) மக்கள் கவிஞன்
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள்
அ) பக்திப் பாடல்கள்
ஆ) திரைப்படப் பாடல்கள்
இ) தாலாட்டுப் பாடல்கள்
ஈ) கானல்வரிப் பாடல்கள்
ஆ) திரைப்படப் பாடல்கள்
5. ‘ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே’ பாடல் இடம்பெற்ற திரைப்படம்
அ) மன்னாதி மன்னன்
ஆ) அறிவாளி
இ) மருதநாட்டு இளவரசி
ஈ) குமாரராஜா
ஈ) குமாரராஜா
6. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்
அ) உயர்ந்த மனிதனாக வாழ வழிசொல்கிறது.
ஆ) அறிஞனாக வாழ வழிசொல்கிறது.
இ) சான்றோனாக வாழ வழிசொல்கிறது.
ஈ) முனிவனாக வாழ வழிசொல்கிறது.
அ) உயர்ந்த மனிதனாக வாழ வழிசொல்கிறது.
7. பட்டுக்கோட்டையின் பாடல்களை
அ) பாடி மகிழலாம்
ஆ) இசையோடு பாடி மகிழலாம்
இ) இசையோடு பாடலாம்
ஈ) படிக்கலாம்
இ) இசையோடு பாடலாம்
8. படித்ததை வாழ்க்கையில்
அ) நினைக்க வேண்டும்
ஆ) பின்பற்ற வேண்டும்
இ) சிந்திக்க வேண்டும்
ஈ) செயலாக்க வேண்டும்
ஆ) பின்பற்ற வேண்டும்
9. அடுத்தவர் கைப்பொருளை நம்பி
அ) வாழவேண்டும்
ஆ) வளர வேண்டும்
இ) வாழக்கூடாது
ஈ) மகிழவேண்டும்
இ) வாழக்கூடாது
10. மனித உறவில் சேரக் கூடாதவர்கள்
அ) அன்பில்லாதவர்கள்
ஆ) அறமில்லாதவர்கள்
இ) மானமில்லாத கோழைகள்
ஈ) உறவில்லாதவர்கள்
இ) மானமில்லாத கோழைகள்