மறுமலர்ச்சிப் பாடல்கள்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
தமிழ்மொழி கவிதைகள் அதிகம் கொண்டது. இதில் மிகப் பழைய கவிதைகளும் உண்டு; புதிய கவிதைகளும் உண்டு. இரண்டுமே சுவை மிகுந்தவை.
புதிய கவிதைகள் என்பவை காலத்தால் புதுமையானவை. இது இருபதாம் நூற்றாண்டு. புதிய நூற்றாண்டான இதில் எழுதப்படும் கவிதைகள் காலத்தால் புதுமையானவை. இதனால் இவற்றை இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள் என்றும் கூறலாம்.
இவை பொருளாலும் புதுமையானவை. மறுமலர்ச்சிக் கருத்துக்களைத் தருபவை. உலகத்தை மீண்டும் மலரச் செய்யும் இந்தக் கவிதைகளை மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றும் கூறலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இலங்கையைச் சேர்ந்த செயபாலன் ஆகியோரின் கவிதைகளை நீங்கள் இப்பாடத்தில் கற்க இருக்கின்றீர்கள்.