நம்பிக்கை
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
நம்பிக்கை என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதையை எழுதியவர் செயபாலன் ஆவார். இவர் ஓர் ஈழத்துக் கவிஞர்.
வ.ஐ.ச.செயபாலன்
இலங்கையில் உள்ள ‘நெடுந்தீவு’ - என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
இவர் போரின் துன்பத்தையும், இயற்கையின் அழகையும் தம் கவிதையில் தந்தவர்.
இவர் ‘நெடுந்தொகை’ என்னும் கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’ என்பது இவர் எழுதிய மற்றொரு நூல்.
நீங்கள் இவரின் ‘நம்பிக்கை’ என்னும் புதுக்கவிதையைக் கற்க இருக்கிறீர்கள். இப்பாடல் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் தருகிறது.