மறுமலர்ச்சிப் பாடல்கள்

வருகின்ற பாரதம்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இதன் ஆசிரியர் பாரதியார். இவருக்குத் தேசியகவி, மகாகவி என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் பாடல்கள் பாடு பொருளிலும், வடிவத்திலும் புதுமையானவை. மக்களால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவை. இவற்றை மறுமலர்ச்சிப் பாடல்கள் என்றும், இக்காலக்கவிதைகள் என்றும் கூறலாம்.

பாரதியார்

இவரின் முழுப்பெயர் சுப்பிரமணிய பாரதியார்; எட்டயபுரத்தில் பிறந்தார்; இவருடைய தந்தை பெயர் சின்னச்சாமி; தாயார் பெயர் இலக்குமி அம்மையார். 11.12.1882 இல் பிறந்தார்; 11.9.1921 இல் இறந்தார்.

இவர் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் என்னும் நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார்.

மக்களுக்கு விடுதலை உணர்ச்சியைப் பாடல்கள் வழியாக ஊட்டினார். ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று இவரை அழைப்பர்; இந்திய நாட்டு விடுதலைக்காக எழுதியவர். சிறை சென்றவர்.

இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் நூல்களை எழுதியுள்ளார். இவை ‘முப்பெரும் பாடல்கள்’ எனப்படுகின்றன.

இவரின் ஒளிபடைத்த கண்ணினாய் வா என்னும் பாடலை நீங்கள் கற்க இருக்கிறீர்கள்.