மறுமலர்ச்சிப் பாடல்கள்

படித்ததோடு இருந்துவிடாதே

பாடல் கருத்து
Theme of the Poem


படித்தால் மட்டும் போதாது. படித்ததை வாழ்வில் பின்பற்ற வேண்டும். வழிதவறி வாழக்கூடாது. அப்படி வாழ்ந்தால் நல்லவர்கள் இகழ்ந்து பேசுவார்கள். படித்தபின் நல்லவர்கள் இகழும்படி வாழக் கூடாது.

மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்; அதை மீறக்கூடாது; பேச்சிலும் ஒழுக்கத்திலும் மாற்றம் இருக்கக் கூடாது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

துன்பத்தை வென்று மகிழ்ச்சியாக இருக்கக் கல்வி கற்க வேண்டும். சோம்பேறித் தனத்தை ஒழிக்கும் திறமை வேண்டும். தீய குணங்கள் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வான் அளவுக்கு அறிவு உயர வேண்டும்.

வெற்றிமேல் வெற்றி பெற வேண்டும். பலவகை விருதுகளைப் பெற்றுப் பெருமை சேர்க்க வேண்டும். அறிவில் சிறந்த மேதைகள் சொன்னவழி நடக்க வேண்டும். பெற்ற தாயின் புகழையும், பிறந்த மண்ணின் புகழையும் வளர்க்க வேண்டும்.