வருகின்ற பாரதம்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. மறுமலர்ச்சிப் பாடல்களின் தன்மை என்ன?
எளிய சொற்கள்; இக்காலக் கருத்துக்கள்; உணர்ச்சி மிகுந்த ஓசை.
2. பாரதியார் மக்களுக்கு எதை ஊட்டினார்?
மக்களுக்கு விடுதலை உணர்ச்சியை ஊட்டினார்.
3. முப்பெரும் பாடல்கள் யாவை?
கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
4. பாரதியாரை மக்கள் எவ்வாறு அழைப்பர்?
‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று அழைப்பர்.
5. பாரதியார் யாரை வரச் சொல்கிறார்?
மனதில் உறுதி உடையவனை வரச் சொல்கிறார்.
6. பாரதியார் எத்தகைய நடை வேண்டும் என்கிறார்?
சிங்கம் போன்ற நடை வேண்டும் என்கிறார்.
7. பாரதியார் எப்படிப்பட்ட நெஞ்சு வேண்டும் என்கிறார்.
பயம் இல்லாத நெஞ்சு வேண்டும் என்கிறார்,
8. அறிவு என்பது எப்படி இருக்க வேண்டும்?
அறிவு தெளிவாக இருக்க வேண்டும்.
9. பாரதியாரின் பாடல்கள் எத்தன்மை கொண்டவை?
பாரதியாரின் பாடல்கள் வீர உணர்ச்சிக் கொண்டவை.
10. இந்திய விடுதலைக்காகக் கவிதைகள் எழுதிச் சிறை சென்றவர் யார்?
இந்திய விடுதலைக்காகக் கவிதைகள் எழுதிச் சிறை சென்றவர் பாரதியார்.