படித்ததோடு இருந்துவிடாதே
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே - என்னும் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரைப் ‘பட்டுக்கோட்டை’ என்று சுருக்கமாக அழைப்பர்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்ற பெயரும் உண்டு. 29 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.
இவர் எழுதிய பாடல்கள் மிகுதியும் திரைப்படப் பாடல்களாக வெளிவந்தன. வாழ்க்கை அனுபவத்தைப் பாட்டாக வடித்தவர். ‘பாட்டுக்கோட்டை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவரின் பாடல்கள் ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்’ என்னும் தொகுதியாக வெளிவந்திருக்கின்றன.
இவரின் ‘ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே’ என்ற பாடலை நீங்கள் கற்க இருக்கிறீர்கள். இது ‘குமாரராஜா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பாடல் ‘உயர்ந்த மனிதனாக’ வாழும் வழிமுறைகளைச் சொல்கிறது. இப்பாடலை இசையோடு பாடி மகிழலாம்.