நம்பிக்கை
பாடல் கருத்து
Theme of the Poem
ஆற்றில் தண்ணீர் இல்லை. இருக்கிற தண்ணீரும் காய்ந்து கொண்டிருக்கிறது. பெண்குயிலைப் பிரிந்த ஆண்குயில் சோகம்போல மெல்ல மெல்ல நீர் பாய்கிறது. மீன்கள் தண்ணீர் இல்லாமல் நாணல் புற்களுக்குள் சென்று மூச்சு வாங்குகின்றன.
மணல் காய்ந்து கொண்டிருக்கிறது. மணலில் ஆலம் பழத்தின் சிவப்பான தோல் கிடக்கிறது. அதன் சில விதைகள் பக்கத்தில் விழுந்து கிடக்கின்றன. எங்கும் ஒரே வெப்பம். மழை இல்லை. புல், மரம், செடி எல்லாம் காய்கின்றன.
அப்படி இருந்தும் நம்பிக்கையோடு மழையைப் புகழ்ந்து பாடுகிறான் ஒரு சிறுவன்; வன்னி என்னும் ஊரைச் சேர்ந்த அவன் மழை வரும் என்று நம்புகிறான்.