படித்ததோடு இருந்துவிடாதே
பாடஅறிமுகம்
Introduction to Lesson
ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே! - நீ...
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே!
நாட்டின் - நெறிதவறி
நடந்துவிடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்து விடாதே! நீ...
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே! - நீ...
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது! நீ...
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே! - நீ...
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே!
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிடவேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்! நீ...
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே! - நீ...
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்
பெற்றதாயின் புகழும், நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும்! நீ...
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே! - நீ...
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே!
