மறுமலர்ச்சிப் பாடல்கள்

நம்பிக்கை

பாடல்
Poem


நம்பிக்கை

துணை பிரிந்த குயில் ஒன்றின்

சோகம் போல

மெல்ல மெல்லக் கசிகிறது

ஆற்று வெள்ளம்

 

காற்றாடும் நாணலிடை

மூச்சுத் திணறி

முக்குளிக்கும் வரால்மீன்கள்

 

ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது.

 

என்னருகே

வெம்மணலில்

ஆலம் பழக்கோதும்

ஐந்தாறு சிறுவித்தும்

காய்ந்து கிடக்கக் காண்கின்றேன்.

 

என்றாலும்

எங்கோ வெகுதொலைவில்

இனிய குரலெடுத்து

மாரிதனைப் பாடுகின்றான்

வன்னிச் சிறான் ஒருவன்.