இறை வாழ்த்து
பாடல் கருத்து
Theme of the Poem
ஒளிகள் எல்லாவற்றிலும் சிறந்த இயற்கை ஒளியாக இருக்கும் இறைவனே!
- உன்னை மொட்டாகி மலராகி அருளாகிய மணம் பரப்பும் இன்பம் தரும் உயர்ந்த மலர் என்று வாழ்த்துவேனா!
- இனிக்கும் கரும்பைப் பிழிந்து, சாறு எடுத்து, அதைச் சேர்த்துச் செய்த சர்க்கரைக்கட்டி என்று சொல்வேனா!
- மிகவும் தாழ்ந்தவனாகிய எனது நெஞ்சம் என்ற இரும்பைக் கனிய வைத்துப் பேரொளியை எனக்குள் செலுத்திய உன்னை, தூய்மையான தங்கமே என்று சொல்லி வாழ்த்துவேனா!
எவ்வாறு உன்னை வாழ்த்துவேன்! துரும்பைப் போன்றவன் நான்; எனக்கு உன் அருள் தந்தாய். உன் அருள் பெற்றவர்களுள் உயர்ந்த இடம் தந்தாய்! உன்னை எப்படி வாழ்த்துவேன்! எப்படி வாழ்த்தினாலும் நீ உயர்வானவன். ஒளியுள் ஒளியானவன்! நீ வாழ்க!