வாழ்த்து

இறை வாழ்த்து

பாடல்
Poem


திருவருட்பா

அரும்பிலே மலர்உற்று அருள்மணம் வீசும்

ஆனந்தத் தனிமலர் என்கோ

கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ

கடையனேன் உடையநெஞ்சு அகமாம்

இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி

இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ

துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ

சோதியுள் சோதிநின் தனையே!

- வள்ளலார்