வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  வடலூர் வள்ளலார் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள ----------- என்ற ஊரில் பிறந்தார்.

வடலூர் வள்ளலார் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் என்ற ஊரில் பிறந்தார்.

2.  இராமலிங்கர் இறைவனைச் சோதியுள் -------------- என்று புகழ்கிறார்.

இராமலிங்கர் இறைவனைச் சோதியுள் சோதி என்று புகழ்கிறார்.

3.  இறைவன் ---------------- வீசும் ஆனந்தத் தனிமலராக இருக்கிறார்.

இறைவன் அருள்மணம் வீசும் ஆனந்தத் தனிமலராக இருக்கிறார்.

4.  இதயமாகிய இரும்பிலே பழுத்தவன் ------------------- ஆவான்.

இதயமாகிய இரும்பிலே பழுத்தவன்இறைவன் ஆவான்.

5.  வாழ்த்துதல் என்னும் சொல்லுக்கு --------------- என்று பொருள்.

வாழ்த்துதல் என்னும் சொல்லுக்கு போற்றுதல் என்று பொருள்.

6.  வள்ளலார் ------------ என்ற ஊரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.

வள்ளலார் வடலூர் என்ற ஊரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.

7.  பெரும்பதம் என்றால் ---------------- என்று பொருளாகும்.

பெரும்பதம் என்றால் கிடைக்காத பெரிய இடம் என்று பொருளாகும்.

8.  கரும்பிலே எடுத்த சுவைத்திரள் ------------------ ஆவான்.

கரும்பிலே எடுத்த சுவைத்திரள் இறைவன் ஆவான்.

9.  எங்கும் பேரொளியாக இருப்பவன் ---------------- ஆவான்.

எங்கும் பேரொளியாக இருப்பவன் இறைவன் ஆவான்

10.  துரும்பினேன் என்று வள்ளலார் குறிப்பிடுவது -----------.

துரும்பினேன் என்று வள்ளலார் குறிப்பிடுவது தம்மைப்பற்றி