உலக வாழ்த்து
பாடல் கருத்து
Theme of the Poem
நாமக்கல் கவிஞர் உலகை வாழ்த்துகிறார். அதன்பின் நாட்டை வாழ்த்துகிறார். பின்பு குடும்பத்தை வாழ்த்துகிறார். இதன்மூலம் குடும்பம் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். நாடுகள் நன்றாக இருந்தால் உலகம் நன்றாக இருக்கும் என்பது உண்மையாகிறது.
எங்கள் உலகம் வாழ்க! எங்கள் நாடு வாழ்க! எங்கள் தமிழகம் வாழ்க!
எங்கள் மனையறம் வாழ்க! உழவுத் தொழிலும், கைத்தொழிலுமே உலகை உயர்த்தும். ஒரு நாடு நலமாக இருக்க வேண்டுமென்றால் அங்கு நல்ல அரசியலும் சிறந்த வாணிபமும் செழித்திருக்க வேண்டும். எனவே அவை வாழ்க! மனிதர்கள் அன்பு கொண்டு அச்சமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். துன்பமின்றி,
கவலை நீங்கி நாட்டு மக்கள் எல்லாரும் வலிமை பெற வேண்டும்.
தெளிவாகத் தேவவுலகத்தில் உள்ளவர்களும் போற்றும்படியாக எல்லாரும் வாழ வேண்டும். எங்கள் உலகம் வாழ்க! எங்கள் நாடு வாழ்க!