வாழ்த்து

வாழ்த்து

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

மக்கள் இயற்கை, மொழி, உலகம் போன்ற பலவற்றை வணங்குகிறார்கள்; வாழ்த்துகிறார்கள்.

இயற்கை, மொழி, உலகம் போன்றன நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும். மக்கள் தாங்கள் நன்றாக வாழ இயற்கை, மொழி, உலகம் போன்றவற்றை வாழ்த்த வேண்டும்; வணங்க வேண்டும்.

இந்தப் பாடம் இயற்கையாக உள்ள இறைவனை, தமிழ்மொழியை, உலகத்தை வாழ்த்துகின்ற பாடல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.