வாழ்த்து

மொழி வாழ்த்து

பயிற்சி - 4
Exercise 4


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  முடியரசனாரின் இயற்பெயர் யாது?

முடியரசனாரின் இயற்பெயர் துரைராசு.

2.  முடியரசனாரின் பெற்றோர் யாவர்?

முடியரசனாரின் பெற்றோர் சுப்பராயலு, சீதாலட்சுமி.

3.  முடியரசனார் எழுதிய நூல்கள் யாவை?

முடியரசனார் எழுதிய நூல்கள் வீரகாவியம், பூங்கொடி, முடியரசன் கவிதைகள்.

4.  முடியரசனார் எங்கு எப்போது பிறந்தார்?

முடியரசனார் 7.10.1920 இல் மதுரைக்கு அருகில் பெரியகுளம் என்ற ஊரில் பிறந்தார்.

5.  தாயே என்று முடியரசனார் குறிப்பிடுவது எதை?

முடியரசனார் தமிழைத் தாய் என்று குறிப்பிடுகிறார்.

6.  முடியரசனார் தமிழை எவ்வாறு மதிக்கிறார்?

முடியரசனார் தமிழைத் தாயாகவும் உயிராகவும் பெறற்கு அரிய செல்வமாகவும் மதிக்கிறார்.

7.  தமிழ் வாழ்த்து இடம்பெற்ற நூல் யாது?

தமிழ் வாழ்த்து இடம்பெற்ற நூல் பூங்கொடி.

8.  தமிழர்க்குத் தாய்மொழி எது?

தமிழர்க்குத் தாய்மொழி தமிழ்

9.  முடியரசனாருக்குக் கவியரசு பட்டம் சூட்டியவர் யார்?

முடியரசனாருக்குக் கவியரசு பட்டம் சூட்டியவர் குன்றக்குடி அடிகளார்.

10.  தமிழை முடியரசனார் எவ்வாறு வாழ்த்துகிறார்?

தமிழை முடியரசனார் தாய், உயிர், இன்பம் என்று வாழ்த்துகிறார்.