வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நாமக்கல் கவிஞர் ---------- என்ற ஊரில் பிறந்தார்.

நாமக்கல் கவிஞர் மோகனூர் என்ற ஊரில் பிறந்தார்.

2.  தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ----------- ஆவார்.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்நாமக்கல் கவிஞர் ஆவார்.

3.  நாமக்கல் கவிஞர் மேழிச் செல்வம் எனக் குறிப்பிடுவது --------- ஆகும்.

நாமக்கல் கவிஞர் மேழிச் செல்வம் எனக் குறிப்பிடுவதுஉழவுத் தொழில் ஆகும்.

4.  மக்கள் ----------- எய்தி வாழ வேண்டும்.

மக்கள்இன்பம் எய்தி வாழ வேண்டும்.

5.  உலகமும், தேசமும் ------------ அடைய வேண்டும்.

உலகமும், தேசமும் மகிழ்ச்சிஅடைய வேண்டும்.

6.  மக்கள் யாவரும் அன்பு கொண்டு ---------- வாழ வேண்டும்.

மக்கள் யாவரும் அன்பு கொண்டு அச்சமின்றி வாழ வேண்டும்.

7.  கைத்தொழில் வளர்ந்தால் -------------- வளரும்.

கைத்தொழில் வளர்ந்தால்நாடு வளரும்.

8.  நாடு நலமாக நல்ல -------------- வேண்டும்.

நாடு நலமாக நல்ல அரசியல் வேண்டும்.

9.  தெம்பினோடு, தெளிவு பெற்று ------------- வாழ்வோம்.

தெம்பினோடு, தெளிவு பெற்று இன்பம் எய்தி வாழ்வோம்.

10.  மனையறம் என்ற சொல் குறிப்பது -------------- ஆகும்.

மனையறம் என்ற சொல் குறிப்பது இல்லறம்ஆகும்.