உலக வாழ்த்து
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
நாமக்கல்கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் திரு. வெ. இராமலிங்கனார். இவர் சேலம் அருகில் மோகனூர் என்னும் ஊரில் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் வெங்கட்ராமன் தாயார் பெயர் அம்மணி அம்மாள்.
இவர் இளமையில் இருந்தே கவிதைகள் எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கினார். இவருடைய கவிதைகளில் தேசியக் கருத்துகளும், காந்தியச் சிந்தனைகளும் அதிகம். இவர் பாரதியாரால் பாராட்டப்பெற்றவர்.
இவர் தமிழ் நாட்டின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தேச பக்திப் பாடல்கள், தமிழ்த்தேன், தமிழன் இதயம், மலைக்கள்ளன், அவனும் அவளும், தாமரைக்கண்ணி, என்கதை என்பன அவற்றுள் சில.
அவர் எழுதிய தமிழன் இதயம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள “வாழ்க வாழ்க”என்ற பாடல் இங்குப் பாடமாக கொடுக்கப்பெற்றுள்ளது.