உலக வாழ்த்து
பயிற்சி - 4
Exercise 4
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நாமக்கல் கவிஞர் எங்கே பிறந்தார்?
நாமக்கல் கவிஞர் சேலம் அருகில் உள்ள மோகனூரில் பிறந்தார்.
2. நாமக்கல் கவிஞரின் பெற்றோர்கள் யாவர்?
தந்தை வெங்கட்ராமன், தாயார் அம்மணி அம்மாள்.
3. தமிழ் நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
4. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் கவிதைகளில் இடம்பெறும் மையக் கருத்துகள் யாவை?
தேசியக் கருத்துகளும், காந்தியச் சிந்தனைகளும்.
5. நாமக்கல் கவிஞரின் நூல்கள் சிலவற்றைக் கூறுக?
தேச பக்திப் பாடல்கள், தமிழ்த்தேன், தமிழன் இதயம், மலைக்கள்ளன், தாமரைக்கண்ணி, அவனும் அவளும், என் கதை.
6. யார் போற்ற வாழ வேண்டும் என்று வெ. இராமலிங்கனார் கூறுகிறார் ?
தேவர்கள் போற்ற மக்கள் வாழ வேண்டும்.
7. “வாழ்க வாழ்க” என்று நாமக்கல் கவிஞர் எவற்றை வாழ்த்துகிறார்?
உலகம், நாடு, தமிழகம், மனையறம், உழவு, வணிகம், அரசியல் ஆகியவற்றை நாமக்கல் கவிஞர் வாழ்த்துகிறார்.
8. உலக மக்கள் எப்படி வாழவேண்டும் என்று நாமக்கல் கவிஞர் கூறுகிறார்?
உலக மக்கள் துன்பமும், துக்கமும் நீங்கி வாழ வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் கூறுகிறார்.
9. "வாழ்க வாழ்க" என்ற பாடல் உணர்த்தும் கருத்து யாது?
உலக மக்கள் அனைவரும் அன்பு கொண்டு, அச்சம் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்.
10. உலகம் நன்றாக விளங்க வேண்டுமெனில் எது நன்றாக இருக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் பாடுகிறார்?
உலகம் நன்றாக விளங்க வேண்டுமெனில் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்கிறார்.