மொழி வாழ்த்து
பயிற்சி - 3
Exercise 3
1. 'பூங்கொடி' காவியத்தைப் பாடியவர் யார்?
அ) கண்ணதாசன்
ஆ) முடியரசன்
இ) வைரமுத்து
ஈ) பாரதியார்
ஆ) முடியரசன்
2. தமிழ் தமிழர்களுக்கு எது போன்றது?
அ) தாய்
ஆ) தந்தை
இ) தாத்தா
ஈ) அவ்வை
அ) தாய்
3. முடியரசன் கூறும் பெறற்கு அரிய செல்வம் எது?
அ) வைரம்
ஆ) முத்து
இ) தமிழ்
ஈ) தங்கம்
இ) தமிழ்
4. தமிழ் மொழிக்குத் தமிழர்கள் அனைவரும்
அ) தலைவர்கள்
ஆ) சிறுவர்கள்
இ) உறவினர்கள்
ஈ) குழந்தைகள்
ஈ) குழந்தைகள்
5. உலக மொழிகளில் தலைசிறந்தது எது என்று கவிஞர் முடியரசன் கூறுகிறார்?
அ) பிரெஞ்சு
ஆ) ஆங்கிலம்
இ) சமற்கிருதம்
ஈ) தமிழ்
ஈ) தமிழ்
6. தாள் என்ற சொல்லின் பொருள் என்ன?
அ) திருவடிகள்
ஆ) காகிதம்
இ) தலை
ஈ) தாழம்பூ
அ) திருவடிகள்
7. கவிஞர் முடியரசனார் தன்னைத் தமிழுக்கு எவராகக் குறிப்பிடுகிறார்?
அ) தந்தை
ஆ) உறவினர்
இ) சேய்
ஈ) தாய்
இ) சேய்
8. பணிந்தேன் என்ற சொல் குறிப்பிடும் பொருள் யாது?
அ) போற்றினேன்
ஆ) வணங்கினேன்
இ) வாழ்த்தினேன்
ஈ) புகழ்ந்தேன்
ஆ) வணங்கினேன்
9. முடியரசனார் பிறந்த ஊர் எது?
அ) பெரியகுளம்
ஆ) கம்பம்
இ) தேனி
ஈ) திண்டுக்கல்
அ) பெரியகுளம்
10. எது இல்லை என்றால் இன்பம் இல்லை?
அ) பணம்
ஆ) வீடு
இ) உறவு
ஈ) தமிழ்
ஈ) தமிழ்